Thyroid வருவதற்கான முக்கிய காரணம் என்ன? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு அனைத்து திசுக்களின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது.
தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால் உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும். ஹைபோதைராய்டிஸம் தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.
உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால் அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடை கூடுதல், தூக்கக் கலக்கம், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.