பிரபல பாலிவுட் நடிகரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைப்பு
Tiger Shroff Assassination Attempt In Mumbai: பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
மும்பையின் ஜூஹூவில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.// இந்த தாக்குதலில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் ஃபிர்தோஷ் மற்றும் அங்கிருந்த மற்றொரு நபர் பலத்த காயமடைந்தனர்.
ஆரம்பக்கட்ட தகவலின் படி, டைகர் ஷெராஃப் இந்த தாக்குதலில் எந்தவொரு காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது ஓட்டுநர் பிர்தோஷின் இடது கையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இந்த கும்பல் சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
15 குழுக்கள் அமைப்பு
இந்நிலையில் டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த 15 தனிப்படை குழுக்களை அமைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை ஆணையரிடம் முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.