உலகின் மிக கொடிய அதிக விஷம் கக்கும் பாம்பிடம் கடிபட்ட சிறுவன்! பின்னர் நடந்த ஆச்சரியம்
அவுஸ்திரேலியாவில் 7 வயது சிறுவனை உலகில் உள்ள கொடிய விஷப்பாம்பு வகைகளில் ஒன்று கடித்த நிலையிலும் அவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான்.
புலி பாம்பு உலகில் உள்ள கொடிய விஷப்பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த பாம்பு அவுஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவனை நேற்று முன் தினம் கடித்தது.
இதையடுத்து அவன் உடனடியாக மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் பாம்பு கடியில் இருந்து மீண்டு வருகிறான்.
இந்த புலி பாம்பு வகைகள் பொதுவாக அவுஸ்திரேலியாவின் தென் கிழக்கு கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிகம் காணப்படுகின்றன. அவுஸ்திரேலிய புவியியல் துறை கூற்றின்படி, புலி பாம்புகள் உலகில் மூன்றாவது அதிக விஷமுள்ள பாம்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, புலி பாம்பு அதிகளவு விஷத்தை கக்கும் ஆற்றலுடையது.
மேலும் இந்த பாம்புகள் நீர்வாழ் சூழல்கள் மற்றும் பல வீடுகளில் கூட காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. புலி பாம்பு கடிக்கு உடனடியாக சிகிச்சை தராவிட்டால் அது உயிரிப்பை ஏற்படுத்தும். மேலும் பக்க வாதம் கூட ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.
இந்த சிறுவன் விடயத்தில் அவனுக்கு உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.