டிக்டாக்கில் கிடைத்த நட்பு: இலங்கையில் வங்கி ஊழியருக்கு ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி
இலங்கையில் டிக்டாக் செயலி மூலம் பழகி வங்கி ஊழியர் ஒருவரை ஏமாற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றப்பட்ட வங்கி ஊழியர்
இலங்கையில் தனியார் வங்கி ஊழியர் ஓருவர் டிக்டாக் சமூக ஊடக செயலி மூலம் அறிமுகமான ஒருவரால் ஏமாற்றப்பட்டு பெருந்தொகை மற்றும் தங்க நகைகளை இழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

வாசனை திரவியத்தில் மயக்க மருந்து
கடந்த 19ம் திகதி இரவு தனியார் வங்கி ஊழியர் டிக்டாக் சமூக ஊடகம் மூலமாக அறிமுகமான நண்பரை சந்திப்பதற்காக பொரலஸ்கமுவ, கட்டுவாவலவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு அந்த வங்கி ஊழியரை வாசனை திரவியம் ஒன்றை சுவாசிக்க செய்து டிக் டாக் நண்பர் மயக்கம் அடைய செய்துள்ளார்.
இதையடுத்து அடுத்த நாள் ஹோட்டல் அறையில் கண் விழித்து பார்த்த அவர், தான் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், வங்கி அட்டை மற்றும் 258,000 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் உடனடியாக இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
கோட்டை, படுஹேன பகுதியில் வசிக்கும் முன்னணி தனியார் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |