19 வயது டிக்டோக் பிரபலம் அதிர்ச்சி மரணம்! மனம் உடைந்த தந்தை உணர்ச்சிவச அஞ்சலி
அமெரிக்காவில் 19 வயது டிக்டோக் பிரபலம் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிக்டோக் பிரபலம்
எம்மான் அடியன்சா (Emman Atienza) என்ற 19 வயது இளம்பெண் டிக்டோக்கில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.
இவரை 866,000 பேர் டிக்டோக்கில் பின்தொடர்கின்றனர் மற்றும் 44.5 மில்லியன் லைக்குகளையும் பெற்று வந்தார்.
தனது ஃபேஷன், ஸ்டைலுக்கு பெயர் பெற்ற எம்மான், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர் இறந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை. 
எதிர்பாராத மறைவு
எம்மானின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் மகள் மற்றும் சகோதரி எம்மானின் எதிர்பாராத மறைவை நாங்கள் பகிர்ந்து கொள்வது ஆழ்ந்த சோகத்துடன் உள்ளது. அவர் எங்கள் வாழ்க்கையிலும், தன்னை அறிந்த அனைவரின் வாழ்க்கையிலும் மிகுந்த மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் அன்பைக் கொண்டு வந்தார்' என தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சி தொகுப்பாளரான எம்மானின் தந்தை கிம் அடியன்சா, "எதிர்பாராத மறைவு" என தனது மகளின் மரணத்தை குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டு அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல், ரசிகர்கள் பலர் அவரது சமூக வலைதள கணக்கில் இதயப்பூர்வமான அஞ்சலிகளை பகிர்ந்து வருகின்றனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |