புற்றுநோயால் இறப்பதற்கு முன்பு தனது ”கடைசி ஆசைகளை” நிறைவேற்றிய டிக்டாக் பிரபலம் மரணம்
கனடாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞர் தான் இறப்பதற்கு முன்பு தனது கடைசி ஆசைகளை நிறைவேற்றி அதனை டிக்டாக்கில் ஆவணப்படுத்திய பின் மரணமடைந்துள்ளார்.
புற்று நோயால் பாதிப்பு
கனடாவை சேர்ந்த ஹாரிசன் கில்க்ஸ்(Harrison Gilks) என்ற 18 வயது இளைஞருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நுரையீரல் புற்று நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் இறந்து விடுவோம் என முன்னரே கணித்த அவர் சாவதற்கு முன்பு தனக்கு பிடித்தவற்றை செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
தனது கடைசி ஆசைகளை குறித்து அவர் தன்னுடைய டிக்டாக் பக்கத்தில் கடந்த ஜீன் 2022ல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்குப் பிடித்த இடங்களை குறிப்பிட்டு அங்கெல்லாம் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
கடைசி ஆசைகள்
ஒருபுறம் ஹாரிசம் கில்க்ஸ் தனது நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் தனது கடைசி ஆசைகளை நிறைவேற்றி வந்துள்ளார்.
@
மேலும் அவர் பார்க்க நினைத்த அழகான இடங்களுக்கெல்லாம் சென்று அங்கிருந்து வீடியோ எடுத்து தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 18 வயதே நிரம்பிய இவரை டிக்டாக்கில் 3 லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர். அவர் தனக்கு புற்றுநோய் வந்ததை பற்றியும் காணொளியில் கூறியுள்ளார்.
@tiktok
ஹாரிசன் தனக்கு என்னவெல்லாம் வித்தியாசமான ஆசைகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி அதனை டிக்டாக் வீடியோவாக பகிர்ந்து வந்துள்ளார்.
@tiktok
அவர் கடந்த மார்ச் 21 ஆம் திகதி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில்” நான் மருத்துவமனையில் இருக்கிறேன். எனக்கு இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறதென தெரியவில்லை. கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.”
பின் புன்னகையுடன் “உங்களோடு என் கடைசி ஆசை தொடர்பான டிக்டாக் பயணம் சிறப்பாக இருந்தது. எனக்கு நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி” என பேசிய அவர் சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
”ஹாரிசன் எப்போதும் புன்னகையுடன் இருப்பான். அவன் பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்தவன். தனக்கு உண்டான மோசமான சூழ்நிலைகளை கூட சிரித்துக் கொண்டே கடக்க கூடியவன். புற்றுநோயால் அவனது வாழ்வை விழுங்கி விட்டது” என அவரது தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.