டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோவால் சிக்கிய சுவிஸ் இளைஞர்
சுவிஸ் நாட்டவரான இளைஞர் ஒருவர், டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோக்களால் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ
சுவிஸ் நாட்டவரான 24 வயது இளைஞர் ஒருவர், தான் காரில் வேகமாக பயணிக்கும் வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிட்டுவந்தார்.
ஒரு வீடியோவில், அவர் மணிக்கு 198 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, வேகக்கட்டுப்பாட்டை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது கைதைத் தொடர்ந்து, அவரது மொபைலில் இருந்த ஐந்து வீடியோக்களிலும் அவர் மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தைத் தாண்டி பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
Lucerne கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு 3.5ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1,300 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |