குழந்தைகள் தனியுரிமை விவகாரம் - ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்ட டிக்டாக்
குழந்தைகள் தனியுரிமை விவகாரத்தில், டிக்டாக் அமெரிக்க நீதித்துறைக்கு ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
ரூ.3,828 கோடி செலுத்த உள்ள டிக்டாக்
குழந்தைகளின் தனியுரிமை மற்றும் சமூக வலைதள பாதுகாப்பு தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.

இதே போல், 2024 ஆம் ஆண்டில் டிக்டாக்கின் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ், குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை (COPPA) மீறியதாக அமெரிக்க நீதித்துறை அதன் மீது வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் 13 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் தனிபட்ட தகவல்களை பெற்றோர் அனுமதியின்றி சேகரித்ததாகவும், குழந்தைகளின்கணக்குகளை நீக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தும் நீக்கப்படவில்லை என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், டிக்டாக் செயலி அமெரிக்க நீதித்துறைக்கு 400 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.3,828 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
இதில், ரூ2,871 கோடியை உடனடியாகவும், ரூ957 கோடியை மியூசிக்கலி செயலி மீதான முந்தைய உத்தரவை ரத்து செய்த பின்னரும் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக COPPA விதிமீறலுக்காக 2019 ஆம் ஆண்டில் கூகிளின் யூடியுப் 170 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |