பிரித்தானிய இளம்பெண், தாயாருக்காக செய்த கொடூர கொலை... வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
பிரித்தானியாவில் சமூக ஊடக பிரபலம் ஒருவர் தாயாரின் ரகசிய காதலனை திட்டமிட்டு கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட கொலை
திட்டமிட்ட கொலையை சாலை விபத்து என நம்ப வைக்கவும் முயற்சித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 23 வயதான Mahek Bukhari என்பவர் தமது தாயார் 45 வயதான Ansreen என்பவருடன் சேர்ந்தே கொலைக்கு திட்டமிட்டுள்ளார்.
Credit: Instagram
21 வயதான Saqib Hussain மூன்று வருடமாக Ansreen என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், தம்மிடம் இருக்கும் காணொளி காட்சிகளை அம்பலப்படுத்த இருப்பதாக கூறி, 3,000 பவுண்டுகள் கேட்டு மிரட்டியுள்ளார்.
இந்த நெருக்கடியில் இருந்து தப்ப, சமூக ஊடக பிரபலமான Mahek Bukhari மற்றும் அவரது தாயார் Ansreen ஆகியோர் Saqib Hussain என்பவருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
நெருக்கமான காட்சிகள்
அத்துடன் மேலும் 6 பேர்களுடன் இணைந்து மிரட்டி, Saqib Hussain தம்மிடம் இருப்பதாக கூறும் நெருக்கமான காட்சிகள் மற்றும் புகைப்படங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
Credit: Leciestershire Police
கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் திகதி Leicester பகுதியில் சந்திக்க முடிவு செய்த நிலையில், Saqib Hussain தமது நண்பர் Hashim Ijazuddin என்பவருடன் இந்த சந்திப்புக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால் சம்பவயிடத்தில் ஒரு காருக்கு பதிலாக இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதை கண்ட Saqib Hussain அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார். இதில் அந்த இரு கார்களும் இவர்களை துரத்த, Saqib Hussain சென்ற கார் மரத்தில் மோதி இரண்டாக பிளந்ததுடன், தீ பற்றியெரிந்தது.
இந்த சம்பவத்தில் Saqib Hussain மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். ஆனால், மரணத்திற்கு சில நிமிடங்கள் முன்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த Saqib Hussain, தங்களை வாகனம் ஒன்று முட்டித்தள்ளியதாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் உறுதி
திட்டமிட்டே தங்களை விபத்தில் சிக்க வைத்ததாகவும் Saqib Hussain பொலிசாரிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, உடனடியாக வந்து தங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் கெஞ்சியுள்ளார்.
Credit: Enterprise
ஆனால், அடுத்த சில நொடிகளில் அலறல் சத்தம் கேட்கவும், அலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் Mahek Bukhari மற்றும் அவரது தாயார் Ansreen ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இவர்களுடன் மேலும் ஐவர், இந்த வழக்கில் குற்றவாளிகள் எனவும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், Ansreen உடனான நெருக்கம் காரணமாக சுமார் 3,000 பவுண்டுகள் வரையில் அவருக்காக Saqib Hussain செலவிட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், Saqib Hussain வசமிருந்த அந்தரங்க காட்சிகள் மற்றும் புகைப்படங்களை அதிகாரிகள் தரப்பு கைப்பற்றியுள்ளது. இதுவே அந்த கொலைக்கு காரணம் எனவும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. செப்டம்பர் 1ம் திகதி இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றே நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |