ஜாம்பவான்கள் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த இளம்வீரர்! டி20யில் ஹாட்ரிக் சதம்
டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தியாவின் திலக் வர்மா படைத்துள்ளார்.
ஹாட்ரிக் சதம்
சையத் முஷ்தாக் அலி கிண்ணத் தொடரில் நடந்த போட்டியில் ஐதராபாத் மற்றும் மேகாலயா அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஐதராபாத் அணி 4 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் திலக் வர்மா (Tilak Varma) 67 பந்துகளில் 151 ஓட்டங்கள் விளாசினார். இதில் 10 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் ஆடிய மேகாலயா அணி 69 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், ஐதராபாத் அணி 179 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
அறிமுக வீரரை களத்திலேயே நேரடியாக எச்சரித்த ஸ்டார்க்! நான் உன்னைவிட வேகமாக பந்துவீசுவேன் என சவால் (வீடியோ)
முதல் வீரர்
திலக் வர்மாவுக்கு இது ஹாட்ரிக் சதம் ஆகும். இதன்மூலம் டி20 வரலாற்றில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த முதல் வீரர் எனும் மாபெரும் சாதனையை படைத்தார்.
மேலும் டி20 150 ஓட்டங்களை எட்டி, ஷ்ரேயாஸ் ஐயரின் (147) அதிகபட்ச ஸ்கோர் சாதனையையும் முறியடித்தார்.
திலக் வர்மா 20 சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதம், 2 அரைசதங்களுடன் 616 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |