இங்கிலாந்தை மிரட்டிய திலக் வர்மா! சேப்பாக்கத்தில் இந்தியாவுக்கு கிடைத்த அபார வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவுக்கு அபார வெற்றி கிடைத்துள்ளது.
இரண்டாவது டி20 போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து அசத்தி வருகிறது.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
Off-stump out of the ground!
— BCCI (@BCCI) January 25, 2025
Varun Chakaravarthy gets his second 🔥🔥
Follow The Match ▶️ https://t.co/6RwYIFWg7i#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/HPb865qPVJ
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 45 ஓட்டங்கள் குவித்தார்.
பந்துவீச்சை பொறுத்தவரை அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இந்திய அணி அபார வெற்றி
இதையடுத்து 166 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கம் சற்று ஏமாற்றமாக இருந்தது.
2️⃣-0️⃣ 🙌
— BCCI (@BCCI) January 25, 2025
Tilak Varma finishes in style and #TeamIndia register a 2-wicket win in Chennai! 👌
Scorecard ▶️ https://t.co/6RwYIFWg7i #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/d9jg3O02IB
ஆனால் பின்னர் வந்த திலக் வர்மா தனது அதிரடி ஆட்டத்தால் 55 பந்துகளுக்கு 72 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திலக் வர்மா இரண்டு பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |