மீண்டும் களமிறங்கி விளாசிய திலகரத்னே தில்ஷன் மற்றும் தரங்கா! அபார வெற்றி பெற்ற இலங்கை அணி... நெகிழ்ந்த ரசிகர்கள்
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணியும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
திகபட்சமாக பிரயன் லாரா 53 ரன்களும், டிவைன் ஸ்மித் 47 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை ஜாம்பவான்கள் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஜாம்பவான்கள் உபுல் தரங்கா 53 ரன்களும், திலகரத்னே தில்ஷன் 47 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதையடுத்து இலங்கை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் ஜெயசூர்யா, தில்ஷன், தரங்கா, அர்னால்டு, மகரூப், ரங்கனா ஹெரத் போன்ற சீனியர் நட்சத்திர வீரர்கள் மீண்டும் களமிறங்கி விளையாடியது ரசிகர்களை நெகிழச்சியான மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
The years may go by but somethings never change. The #SLLvsWIL game will be one to remember.
— Road Safety World Series (@RSWorldSeries) March 6, 2021
? A massive congratulations to #SriLankaLegends on the victory. #YehJungHaiLegendary pic.twitter.com/o4yfEvHhaA
