ஆண்டு சம்பளத்தில் ரூ 300 கோடியை இழந்த ஆப்பிள் CEO: காரணம் இது தான்
ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கின் ஆண்டு சம்பளத்தில் ரூ 300 கோடியை அந்த நிறுவனம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ 300 கோடி தற்போது குறைவாக
சுமார் 2.89 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்பு கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருபவர் டிம் குக். இவரது ஆண்டு சம்பளம் தொடர்பிலான தரவுகளை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், 63 வயதான Tim Cook கடந்த 2022ல் வாங்கிய சம்பளத்தைவிட ரூ 300 கோடி தற்போது குறைவாக வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஆண்டு சம்பளமாக டிம் குக் 63.21 மில்லியன் டொலர் கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது இந்திய பணமதிப்பில் சுமார் 523.83 கோடி ரூபாய். ஆனால் 2022ல் 99.42 மில்லியன் அமெரிக்க டொலர்களை டிம் குக் சம்பளமாக பெற்றுள்ளார். அதாவது ரூ 823.91 கோடி. இந்த சம்பளம் குறைப்பு என்பது ஏற்கனவே திட்டமிட்ட நடவடிக்கை என்றே ஆப்பிள் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2022 இலக்கை விட 40 சதவிகிதம் குறைக்க திட்டமிட்டது, ஆனால் குக்கின் சம்பளம் 2023 ஆம் ஆண்டிற்கான அவரது இலக்கு வருவாயை விட அதிகமாக இருந்தது.
ரூ 523.83 கோடி சம்பளம்
வெளியான தரவுகளின் அடிப்படையில், டிம் குக் 49 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை தோராயமாக 28 சதவிகிதம் விஞ்சியுள்ளார். 2023ல் அவருக்கு சம்பளமாக சுமார் 25 கோடி ரூபாய் (3 மில்லியன் அமெரிக்க டொலர்) அளிக்கப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் தரவுகளை தாக்கல் செய்துள்ளது.
2021 மற்றும் 2022ல் இதே தொகையை அவர் சம்பளமாக பெற்றுள்ளார். அத்துடன் அவருக்கு சுமார் 389.25 கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் நிறுவன பங்குகளை அளித்துள்ளனர்.
மட்டுமின்றி ஊக்கத்தொகையாக ரூ 88.78 கோடி பெற்றுள்ளார். இதர சலுகைகளாக ரூ 20.93 கோடி பெற்றுள்ளார். மொத்தமாக ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் 2023ல் ரூ 523.83 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றே தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |