ஆப்பிள் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகும் டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து அடுத்த ஆண்டு டிம் குக் விலக உள்ள நிலையில், அந்த நிறுவனம் அதன் புதிய தலைவரை தெரிவு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது.
14 ஆண்டுகள்
ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியலின் மூத்த துணைத் தலைவராக செயல்பட்டுவரும் John Ternus அடுத்த ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்புக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

14 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பில் இருக்கும் குக் பதவி விலகும் நிலையில், அடுத்த கட்டத்திற்கான தயாரிப்புகளை அதன் வாரியமும் மூத்த நிர்வாகிகளும் சமீபத்தில் தீவிரப்படுத்தியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஜனவரி மாத இறுதியில் அதன் அடுத்த வருவாய் அறிக்கைக்கு முன்னர் ஆப்பிள் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த 2011ல் Steve Jobs பதவி விலகியதன் பின்னர், ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக டிம் குக் பொறுப்புக்கு வந்தார்.

தற்போது நீண்ட 14 வருடங்கள் சேவைக்கு பின்னர், 2026ல் டிம் குக் பதவி விலக இருக்கிறார். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |