ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக் - அடுத்து யார்?
ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து டிம் குக் விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் ஆப்பிள் நிறுவனம், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஸ்மார்ட் வாட்ச், ஐமேக் ஆகிய தயாரிப்புகளுக்கு உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
டிம் குக்
கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் விலகிய பின்னர், டிம் குக்(Tim Cook) ஆப்பிள் நிறுவன CEO ஆக பதவியேற்றார்.

டிம் குக்கின் நிர்வாகத்தின் கீழ், ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் இருமடங்காக உயர்ந்தது.
2018 ஆம் ஆண்டில் ட்ரில்லியன் டொலர் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்றது.
தற்போது வருவாய் அடிப்படையில் உலகின் 2வது பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது.
15 ஆண்டுகளாக பதவிக்காலத்திற்கு பின்னர், தற்போது டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவன CEO பணி தன் வாழ்வில் சிறப்பு சேர்த்ததாக பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
CEO பதவியில் இருந்து விலகிய பின்னர், ஆப்பிள் நிறுவன நிர்வாக இயக்குனராக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் CEO ஆக ஜான் டெர்னஸ்(john ternus) பதவியேற்க உள்ளார்.

2001 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்த ஜான் டெர்னஸ், ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் துணை தலைவராக உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |