ரச்சினுக்கு பதிலடியாய் திருப்பியடித்த கேப்டன்! கடைசி பந்தில் அவுஸ்திரேலியா திரில் வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது.
ரச்சின் ரவீந்திரா 68
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 68 ஓட்டங்களும், கான்வே 63 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தொடக்க முதலே அதிரடியில் மிரட்டியது. டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில் 24 ஓட்டங்களும், டேவிட் வார்னர் 20 பந்துகளில் 32 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி 25 ஓட்டங்கள் எடுத்தார். ஜோஷ் இங்கிலீஸ் தனது பங்குக்கு 20 ஓட்டங்கள் எடுக்க, கேப்டன் மிட்செல் மார்ஷ் சரவெடியாய் வெடித்தார்.
அவருடன் கைகோர்த்த டிம் டேவிட்டும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்த கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல, மார்ஷ் 8வது அரைசதத்தினை பதிவு செய்தார்.
@cricketcomau
திரில் வெற்றி
கடைசி ஓவரில் அவுஸ்திரேலிய வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.
டிம் சௌதீ வீசிய அந்த ஓவரில், முதல் 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் கிடைத்தது. ஆனால் 4வது பந்தில் டேவிட் சிக்ஸர் அடிக்க, 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் டேவிட் எடுக்க, ஒரு பந்தில் 4 ஓட்டங்கள் தேவை என பரபரப்பு ஏற்பட்டது. அந்த பந்தினை டிம் டேவிட் பவுண்டரியாக விரட்ட, பிலிப்ஸ் முயற்சித்தும் மிஸ் ஆகி எல்லை கோட்டினை எட்டியது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கேப்டன் மார்ஷ் 44 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களும், டிம் டேவிட் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களும் விளாசினர்.
@X
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |