37 பந்துகளில் 102 ரன்! புதிய வரலாறு படைத்த வீரர்..நொறுங்கிய மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20யில் டிம் டேவிட் அதிரடி சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஷாய் ஹோப் சதம்
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் 36 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசினார். அணித்தலைவர் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவிக்க, மேற்கிந்திய தீவுகள் 214 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது களத்தில் இறங்கிய டிம் டேவிட் (Tim David) ருத்ர தாண்டவம் ஆடினார்.
டிம் டேவிட்
சிக்ஸர் மழை பொழிந்த அவர் 37 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார். இதில் 11 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மிட்செல் ஓவன் 16 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 36 ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலியா 16.1 ஓவரிலேயே 215 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டிம் டேவிட் சதம் விளாசியதன் மூலம் டி20யில் குறைந்த பந்துகளில் (37) சதம் அடித்த முதல் அவுஸ்திரேலிய வீரர் எனும் வரலாறு படைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |