76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்: பறந்த 8 சிக்ஸர்கள்..ருத்ர தாண்டவமாடிய டிம் டேவிட் 83 ரன்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20யில் அவுஸ்திரேலியா 178 ஓட்டங்கள் குவித்தது.
விக்கெட் சரிவு
டார்வினில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 நடந்து வருகிறது.
"I think some respect has to be shown."
— cricket.com.au (@cricketcomau) August 10, 2025
Tim David 😂 #AUSvSA pic.twitter.com/fY7jTp54gg
தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை துவங்கியது.
ரபாடாவின் மிரட்டலான பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் (2), ஜோஷ் இங்லிஸ் (0) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் 13 ஓட்டங்களில் வெளியேற, அதிரடி காட்டிய கிரீன் 13 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார்.
வாணவேடிக்கை
அடுத்து வந்த ஓவன் (2), மேக்ஸ்வெல் (1) இருவரும் ஆட்டமிழந்து வெளியேற, அவுஸ்திரேலிய அணி 75 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
அப்போது வாணவேடிக்கை காட்டத் தொடங்கிய டிம் டேவிட் (Tim David) சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவரது சரவெடி ஆட்டத்தின் மூலம் அவுஸ்திரேலியா 178 ஓட்டங்கள் குவித்தது.
டிம் டேவிட் 52 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் விளாசினார்.
தென் ஆப்பிரிக்காவின் மாபாகா 4 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |