வெளிநாட்டு சிக்ஸர் மன்னனை களமிறக்கும் அவுஸ்திரேலியா! இந்திய அணிக்கு நெருக்கடி
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய டிம் டேவிட் 16 சிக்ஸர்களுடன் 186 ஓட்டங்கள் குவித்திருந்தார்
டிம் டேவிட் சிங்கப்பூர் அணிக்காக 11 போட்டிகளில், 3 அரைசதங்களுடன் 429 ஓட்டங்கள் விளாசியுள்ளார்
சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி 20ஆம் திகதி மொஹாலில் நடக்க உள்ளது.
இந்தத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள டிம் டேவிட் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் வீரரான டிம் டேவிட் பிக்பாஷ் லீக் தொடரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர் ஆவார்.
? SOUND ON ?
— cricket.com.au (@cricketcomau) September 18, 2022
Tim David whacking balls in Australian kit ? #INDvAUS pic.twitter.com/q0n0C7OnpN
பகுதி நேர பந்துவீச்சாளராகவும் செயல்படும் அவரை அவுஸ்திரேலிய அணி களமிறக்குகிறது. ஏற்கனவே ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், பின்ச், டேனியல் சாம்ஸ் போன்ற வீரர்கள் உள்ள நிலையில், டிம் டேவிட்டும் இணைந்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL