நியூசிலாந்து ரசிகர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட அவுஸ்திரேலியா வீரர்! ஏன் தெரியுமா?
அவுஸ்திரேலியா அணி வீரரான டிம் பெயின் நியூசிலாந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று முன்னணி வீரர்கள் உட்பட பலரும் கூறி வந்த நிலையில், அவுஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் ஆன, டிம் பெயின் இந்தியா தான் வெற்றி பெறும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடும் நட்சத்திர வீரர்களை கொண்ட இந்திய அணியிடம் நியூசிலாந்து அணியானது தோல்வியைத் தழுவும் என்று கூறியிருந்தார்.
ஆனால், தற்போது நியூசிலாந்து அணி உலக சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், நியூசிலாந்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், சில நேரங்களில் நாம் பேசுவது மற்றவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படும்.
அதுபோல தான் நியூசிலாந்து ரசிகர்களும் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள். இருந்தாலும் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு சிறிய நாடாக இருக்கிறபோதும் நியூசிலாந்து அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது.
அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இறுதிப் போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று கூறியுள்ளார்.