பிக்பாஷில் சிக்ஸர் மழை! 53 பந்துகளில் சதம்..சம்பவம் செய்த வீரர்
பிக்பாஷ் 2025 போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் வீரர் டிம் செய்பெர்ட் அதிரடி சதம் விளாசினார்.
டிம் செய்பெர்ட்
பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் போட்டி நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்ற பிரிஸ்பேன் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, மெல்போர்ன் அணி முதலில் துடுப்பாடியது.
ஜோஷ் பிரவுன் (15), ரிஸ்வான் (4), ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் (14) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஓலிவர் பீகே மற்றும் டிம் செய்பெர்ட் கூட்டணி அடித்து நொறுக்கியது.
வாணவேடிக்கையில் சதம்
சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய டிம் செய்பெர்ட் (Tim Seifert), 53 பந்துகளில் சதமடித்தார். அதேபோல் ஓலிவர் பீகே 25 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அணியின் ஸ்கோர் 203 ஆக உயர்ந்தபோது இந்தக் கூட்டணி உடைந்தது. ஓலிவர் பீகே (Oliver Peake) 29 பந்துகளில் 57 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து செய்பெர்ட் 102 ஓட்டங்களில் (56 பந்துகளில் 6 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) ஆட்டமிழக்க, மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 212 ஓட்டங்கள் குவித்தது.
ஜேக் வில்டர்மத் (Jake Wildermuth) 3 விக்கெட்டுகளும், பார்ட்லெட் மற்றும் டூலே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |