இறுதிப்போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய செய்பெர்ட்: கிண்ணத்தை வென்ற பட்லரின் மான்செஸ்டர்
Manchester Super Giants Won first the hundred title: ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தி, மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் முதல் The Hundred கிண்ணத்தை கைப்பற்றியது.
லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்த The Hundred இறுதிப்போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
இறுதிப்போட்டி
மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகளுக்கு இடையிலான The Hundred இறுதிப்போட்டி லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 158 ஓட்டங்கள் குவித்தது. டொனால்ட் 19 பந்துகளில் 38 ஓட்டங்களும், கிரேகோரி 16 பந்துகளில் 32 ஓட்டங்களும் விளாசினர். நூர் அகமது 3 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் மற்றும் லியாம் டாவ்ஸன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் பவுல் வால்டர் 22 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 23 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
டிம் செய்பெர்ட் ஆட்டநாயகன்
சிக்ஸர் பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய டிம் செய்பெர்ட் (Tim Seifert) 38 பந்துகளில் 72 ஓட்டங்கள் விளாசிய நிலையில் (7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) ஆமிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து லீஸ் டு ப்ளூய் அதிரடியாக 18 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவிக்க, மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 98 பந்துகளில் 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் முதல் முறையாக The Hundred கிண்ணத்தைக் கைப்பற்றிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மகுடம் சூடியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை டிம் செய்பெர்ட் வென்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |