கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும் நேரம் வந்துவிட்டது: பிரான்ஸ் பிரதமர் கொரோனா தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரான்ஸ் மூன்றாவது கொரோனா அலைக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், பெருநகர பாரீஸ் பகுதியில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் பிரான்ஸ் பிரதமர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் பிரான்சில் புதிதாக 29,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இது கடந்த செவ்வாய்க்கிழமையை ஒப்பிடும்போது 4.5 சதவிகிதம் அதிகமாகும். பிரான்சில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளன. குறிப்பாக தலைநகர் பாரீஸில் கொரோனா தொற்று பயங்கரமாக அதிகரித்துள்ளது.
ஆகவே, பெருநகர பாரீஸ் பகுதியில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் பிரான்ஸ் பிரதமரான Jean Castex.
ஏற்கனவே நாட்டின் இரண்டு பகுதிகளில் வார இறுதி பொதுமுடக்கம் அமுலில் உள்ள நிலையில், அதேபோல் பெருநகர பாரீஸ் பகுதியிலும் அறிமுகப்படுத்தப்படும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.