ஜேர்மானியர்களின் மனம் கவர்ந்த திமிங்கலம் தொடர்பில் சில புதிய தகவல்கள்
ஜேர்மானியர்களின் மனம் கவர்ந்த திமிங்கலமான டிம்மி குறித்த சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமிங்கலம் தொடர்பில் சில புதிய தகவல்கள்
பல மாதங்களாக ஜேர்மானியர்களின் மனம் கவர்ந்த டிம்மி என்னும் திமிங்கலத்தை, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அதன் இயற்கை வாழ்விடத்திற்குத் திரும்ப வழிகாட்டுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், அது சுமார் ஐந்து நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் திமிங்கலம், பால்டிக் கடலை வட கடலுடன் இணைக்கும் டென்மார்க்கிற்கும் சுவீடனுக்கும் இடையிலுள்ள அகன்ற நீர்வழிப்பாதையான கட்டேகாட்டில் உள்ள அன்ஹோல்ட் என்ற சிறிய தீவுக்கு அருகில், மே 14ஆம் திகதி, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஜேர்மனியின் Mecklenburg-Western Pomerania மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் டில் பேக்ஹாஸ், திமிங்கலத்தின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு டிரான்ஸ்மிட்டரிலிருந்து கிடைத்த தரவுகளின்படி, அதன் மரணம் மே 6 அல்லது 7 ஆம் தேதி நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ரு முக்கிய விடயம் என்னவென்றால், டிம்மி ஒரு ஆண் திமிங்கலம் என கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அது ஒரு பெண் திமிங்கலம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிம்மியின் உடல் பாகங்களில் சில டென்மார்க்கில் பயோடீசலாக மாற்றப்பட உள்ளதாகவும், சில எலும்புகள் டென்மார்க் அருங்காட்சியகம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |