அவசர உதவியளிக்க விரைந்த தமிழர் விபத்தில் பலி: வெளிநாடொன்றில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
அவசர உதவி கோரி வந்த அழைப்பை ஏற்று உதவச் சென்ற ஆம்புலன்ஸ் பணியாளரான தமிழர் ஒருவர், வழியில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஒன்று அவுஸ்திரேலியாவில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
அவசர உதவியளிக்க விரைந்த ஆம்புலன்ஸ் பணியாளர்
அவுஸ்திரேலியாவில், ஆம்புலன்ஸ் பணியாளராக 10 ஆண்டுகளாக பணியாற்றிவந்தவர் தினேஷ் தமிழ்க்கொடி (Tinesh Tamilkodi, 38).
கடந்த செவ்வாயன்று, அதிகாலை அவசர உதவி கோரி வந்த அழைப்பை ஏற்று தனது ஆம்புலன்சில் வேகமாகச் சென்றுள்ளார் தினேஷ். ஆனால், செல்லும் வழியில் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது சென்று மோதியுள்ளது.
Image: 9News
அதே பணிக்காக மற்றொரு ஆம்புலன்சில் சென்றுகொண்டிருந்த தினேஷின் சகப் பணியாளர்கள், உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகிவிட்டார் தினேஷ்.
சகப் பணியாளர்கள் கண்ணீர்
தினேஷ் எந்த நாட்டவர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அவரது குடும்பத்தினர் வேறொரு நாட்டிலிருப்பதாக மட்டும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Image: Facebook
இந்நிலையில், 10 ஆண்டுகளாக தங்களுடன் பணியாற்றிவந்த தங்கள் சகப் பணியாளர் பணியின்போதே உயிரிழந்ததையறிந்து அவரது சகப் பணியாளர்கள் கண்ணீர் விடும் காட்சிகள் வெளியாகி காண்போரை கண் கலங்கச் செய்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |