உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணிக்கு காத்திருந்த அதிர்ச்சி: மாற்று வீரர் யார்?
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து டினோ லிவ்ரமெண்டோ விலகியுள்ளார்.
டினோ லிவ்ரமெண்டோ விலகல்
உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான டினோ லிவ்ரமெண்டோவிற்கு(Tino Livramento) பயிற்சியின் போது தொடை தசை(hamstring) காயம் ஏற்பட்டுள்ளது.
Tino Livramento has withdrawn from the #ThreeLions squad due to injury.
— England (@England) June 16, 2026
We're gutted for you, Tino, and wishing you a speedy recovery. ❤️ pic.twitter.com/FpbfwSkynX
இந்த காயம் தீவிரமானதாக இல்லாவிட்டாலும், எதிர்வரும் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும், தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வீரர் யார்?
டினோ லிவ்ரமெண்டோவிற்கு பதிலாக செல்சியா அணியின் வீரர் ட்ரெவோ சலோபா(Trevoh Chalobah) இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
செல்சியா அணியின் பயிற்சியாளர் தாமஸ் டூக்கலின் பயிற்சியின் கீழ் ஏற்கனவே ட்ரெவோ சலோபாவிற்கு பணியாற்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Welcome back to the #ThreeLions squad, @TrevohChalobah! 🤝
— England (@England) June 16, 2026
FIFA விதிகளின் படி போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக தங்களின் 55 பேர் கொண்ட மாற்று பட்டியலில் இருந்து மாற்று வீரரை அணி தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் இங்கிலாந்து அணி தனது சரியான முடிவை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை இரவு 9 மணிக்கு குரோஷியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியை விளையாட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |