பிரான்சிலிருந்து ஒரே நாளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த 1,000 புலம்பெயர்ந்தோர்
பிரித்தானியாவும் பிரான்சும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் செய்துகொண்டுள்ள One in, one out திட்டத்தின் கீழ், இதுவரை 26 பேர் மட்டுமே பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரான்சிலிருந்து ஒரே நாளில் 1,000 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்!
ஒரே நாளில் 1,000 புலம்பெயர்ந்தோர்
ஆம், நேற்று முன்தினம் புதன்கிழமையன்று, ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
15 சிறு படகுகளில் 1,075 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 35,476 ஆக உயர்ந்துள்ளது.
One in, one out திட்டத்தின் கீழ், இதுவரை 26 பேர் மட்டுமே பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அதாவது, இந்த ஆண்டில் மட்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரில் வெறும் 0.7 சதவிகிதம் பேர் மட்டுமே பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆக, One in, one out திட்டம் சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்கு வர தயக்கத்தை ஏற்படுத்தும் என லேபர் அரசு கூறியுள்ள நிலையில், அது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |