பத்தே நாட்களில் உங்கள் முகம் தகதகன்னு ஜொலிக்கணுமா? அப்போ இதை சாப்பிடுங்க
Beauty tips
Face brighten
By Logeswari
அழகு சாதன பொருள்களை பயன்படுத்தினால் மட்டுமே முகம் ஜொலிக்கும் என்று அர்த்தம் இல்லை. நாம் தினமும் எடுத்து கொள்ளும் உணவுகள் மூலமாகவும் நமது முகம் அழகு அடையும்.
நாம் சாப்பிடும் உணவுகளில் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. சினிமா பிரபலங்கள் அழகாக இருக்க காரணம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவு தான்.
என்னதான் விலையுயர்ந்த அழகு சாதன பொருள்கள் பயன்படுத்தினாலும் ஆரோக்கிய உணவை எடுத்து கொண்டாலே சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சரி வாங்க கெமிக்கல் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் முகம் வெண்மை அடைய சில குறிப்புகளை பார்க்கலாம்.
அழகு குறிப்புக்கள்:-
- ஸ்ட்ராபெரி மற்றும் ப்ளூபெர்ரி பழங்கள் ஒரு நாள் விட்டு சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கழிவுகள் நீக்குவதற்கு பயன்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும். மேலும் சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும்.
- தினம் 4-5 பாதாம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலை எடுத்து கொள்வதால் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் வராமல் பாதுகாக்கும். அதுமட்டும் இல்லாமல் முகத்தில் தேவையில்லாத கருவளையங்கள் விழுவதை தடுக்கின்றது.
- அடிக்கடி உணவில் மீன் சேர்த்து கொள்ள வேண்டும். அன்றாட உணவில் மீன் சேர்த்து கொள்வதால் இது உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- சைவ உணவு பிரியர்கள் தினம் ஒரு கீரை வகையை உணவில் சேர்த்து எடுத்து கொள்ளலாம். இதில் அனைத்து வித வைட்டமின்களும் நிறைந்து இருக்கிறது. இதனால் சருமம் சோர்வாக இல்லாமல் புத்துணர்வுடன் இருப்பதற்கு கீரை பெரும் பங்கு வகிக்கின்றது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US