மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அதிலிருந்து எளிதாக விடுபட இதை சாப்பிட்டுங்கள் போதும்
தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.
வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக் கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்' என்று அழைக்கிறோம்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்
மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது.
பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது.
காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
சரி மலச்சிக்கல் பிரச்சினையை எப்படி எளிதான முறையில் சரி செய்யலாம் என காண்போம்.
எலுமிச்சை ஜூஸ்
ஒரு கப் சூடான தண்ணீரில் கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து குடித்தால் போதும் உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை என எடுத்து வந்தால் உங்கள் மலச்சிக்கல் தீரும்.
காபி
காபி ஒரு டையூரிடிக் பானம். காபி உடனடியாக உங்கள் குடல் இயக்கத்தை துரிதப்படுத்தி மலம் வெளியேறுவதை அவசரப்படுத்தும். மேலும் குடலிலுள்ள தசைகளை இயக்கி மலத்தை ஈஸியாக தள்ளி விடும்.
உலர்ந்த திராட்சை
உலர்ந்த திராட்சையில் நார்ச்சத்து மற்றும் டார்டாரிக் அமிலம் உள்ளது. இது மல மிளக்கியாக செயல்படுகிறது. எனவே தினசரி கொஞ்சம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
இஞ்சி அல்லது புதினா டீ
புதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி மலம் வெளியேற ஈஸியாக்குகிறது.
கருப்பட்டி
கருப்பட்டியை நீங்கள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். நாள்பட்ட அல்லது அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்க வல்லது. ஒரு டீ ஸ்பூன் கருப்பட்டியை எடுத்து சூடான நீரில் கலந்து படுக்கைக்கு போவதற்கு முன் குடிக்க வேண்டும். இது காலையில் எழுந்ததும் மலம் எளிதாக வெளியேற உதவும்.