சர்க்கரை நோயாளிகளே! உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த ஒரே ஒரு பொருள் போதும்! என்னது தெரியுமா?
சர்க்கரை நோய் என்றால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும்.
ஆனால் சில உணவுகள், உணவு பழக்கம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும். அந்தவகையில் சர்க்கரை நோயை காட்டுல வைக்க அஸ்வகந்தா வேர் பெரிதும் உதவுகிறது. சரி வாங்க இந்த வேர் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அஸ்வகந்தா இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தசை செல்களில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதனால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் நீரிழிவு நோய்க்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். நீரிழிவு உட்பட மன அழுத்தத்தால் ஏற்படும் பல நோய்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் அஸ்வகந்தா உதவும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.
உடலில் இன்சுலின் எதிர்ப்பின் முக்கிய காரணம் வீக்கம். இது நீரிழிவு நோயின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. அஸ்வகந்தாவின் அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவு செயல்பாடுகள் அழற்சி காரணிகளைக் குறைக்கவும், இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.
அஸ்வகந்தா நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாக இருந்தாலும் அது டோஸ் சார்ந்தது என்பதால் மருத்துவ நிபுணரை அணுகாமல் உட்கொள்ளக்கூடாது.