ஒரே வாரத்தில் முகம் பளபளன்னு மின்ன வேண்டுமா? அப்போ உடனடியாக இதை ட்ரை பண்ணி பாருங்க!
சருமம் பொலிவாக இருக்க பெண்கள் கண்ணில் தென்படுவதை எல்லாம் பயன்படுத்துவதுண்டு. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கொடுப்பதில்லை என்பதே உண்மை.
சரியான உணவு பழக்கம், நேரத்திற்கு ஏற்ற தூக்கம் போன்றவற்றை சரியாக எடுத்து கொண்டாலே முகம் இயர்கையாகவே பொலிவு அடையும். சிலர் ஒயின் குடிப்பதால் முகம் வெண்மையாகும் என்று கூறுவதுண்டு.
இதனால் அழகு மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான பல நன்மைகளையும் தருகின்றது. ஒயின் குடிப்பதால் முகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
ஒயினின் நன்மைகள்:-
சிலருக்கு வயது குறைவாக இருந்தாலும் அவர்களின் முகத்தில் சுருக்கம் விழுந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் ஒயின் எடுத்து கொள்வதால் தோலில் சுருக்கம் விழாமல் தடுக்கின்றது. இது UV கதிர்களால் தோலில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
முகப்பரு வருவதற்கு சில குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் தான் கரணம். ஆனால் ஒயின் எடுத்து கொள்வதால் அந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியை குறைக்கும்.
ஒயின் எடுத்து கொள்வதால் தோலின் நிறம் மாறுபடும். தோலின் ஆரோக்கியம் மேம்படும். தினம் ஒயின் குடிப்பதாலும் ஒயின் பேஷியல் செய்வதாலும் தோலிற்கு பல பயன்கள் கிடைக்கும்.
இப்போது பல வகைகளில் இந்த ரெட் ஒயின் பயன்படுத்தபடுகிறது. பேஷியல் செய்யவும், முகத்தை கழுவுவதற்கு, ஒரு காட்டனில் ஒயினை நனைத்து முகத்தை துடைப்பதும் என பல வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு ஆராய்ச்சியில் ஒயின் குடிப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், உடலில் கெட்ட கொழுப்பின் அளவு, நீரழிவு நோய் வராமல் பாதுகாக்கின்றது.