முடி ஆரோக்கியமா இருக்கனுமா? அப்போ இத மட்டும் செய்து பாருங்க
ஒருவருடைய அழகில் முக்கியமாக இருப்பது முகம் என்று தான் நாம் அனைவரும் நினைத்துக்கொண்டு உள்ளோம். ஆனால் ஒருவரின் முடியானது வேறொருவரை வசீகரிக்ககூடியதாக கட்டாயம் இருக்கும்.
ஆனால் அப்படிபட்ட முடியை சரியான முறையில் நாங்கள் பராமரிப்பதில் சிரமப்படுகின்றோம். கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்துவதோடு, ஹேர் பேக்குகளையும் போடுவார்கள். அதுமட்டுமின்றி, சிலர் தினமும் தலைக்கு குளித்து வருவார்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் முடிக்கு எவ்வாறு ஆரோக்கியம் கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆகவே வீட்டில் இருந்துக்கொண்டே எப்படி முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என தெரிந்துக்கொள்வோம்.
இயற்கையில் இருந்து பாதுகாத்தல்
தலைமுடியை சூரியன், காற்று மற்றும் மழையிலிருந்து எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
அதிகப்படியான சூரிய வெப்பம், அழுக்கு மற்றும் மாசுபாட்டின் வெளிப்பாடு முடி பிரச்சனைகளை அதிகரிக்கும்.
இவை அழுக்கு படிவதற்கும், உச்சந்தலையில் தொற்று ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
ஈர முடியை கையாளும் முறை
முடி ஈரமாக இருக்கும்போது, தலைமுடியின் வேர்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஷாம்பு பூசும் பொழுது கவனமாக மெல்லியதாக பூச வேண்டும். குளித்த உடனே முடியை துடைக்க வேண்டாம். அதற்கு பதிலாக shower cap பயன்படுத்தவும்.
குளித்து முடித்தவுடன் கண்டிஷனர் பயன்படுத்தவும். இல்லையேல் தலைமுடி உதிரும்.
எண்ணெய் வைத்தல்
தலைக்கு எண்ணெய் தடவுவது தலைமுடிக்கு நல்லது. நீங்கள் பொதுவாகவே அதிக ஷாம்பூவைப் பயன்படுத்துவீர்கள், இது உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றும், ஆகவே தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கவும்.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி பராமரிக்க வேண்டும்?
வாழைப்பழம்
வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் பிசைந்து, வேர்கள் முதல் நுனிகள் வரை உங்கள் தலைமுடியில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு நல்ல ஷாம்பு கொண்டு கழுவவும். இந்த முறையில் செய்தால் முடி சேதமடையாது மற்றும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்கும்.
முட்டை
1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 3 முட்டையின் மஞ்சள் கரு மற்றும் 2-3 சொட்டு வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலந்து, முடியில் பூச வேண்டும். பின்னர் ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியை நன்கு கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |