இரவில் தூங்காமல் கொட்ட கொட்ட முழித்து இருக்கிறீர்களா? வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க!
பொதுவாக வெங்காயம் என்றால் வெறுத்து ஒதுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகம். ஏனென்றால், பலருக்கு வெங்காயத்தின் நன்மைகள் குறித்து தெரிவதில்லை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல முயற்சிகளை செய்து வருபவர்களுக்கு வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் என்பது பற்றி பலர் அறிவதில்லை.
இதற்கு என்று தனி நேரம் ஒதுக்கி நாம் சாப்பிடாவிட்டாலும் உணவில் இருக்கும் வெங்காயத்தை நாம் ஒதுக்கி வைக்காமல் சாப்பிட்டாலே போதுமானது. வெங்காயம் சாப்பிட பிடிக்காதவர்கள் இப்படி ட்ரை பண்ணி பாருங்க..
- வெங்காயத்தை 24 மணிநேரம் ஒரு கப்பில் தேனோடு ஊறவைக்க வேண்டும். மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இது காய்ச்சல், தூக்கமின்மை, கொலஸ்ட்ரால் போன்றவற்றை சீராக்கும்.
- மேலும், இந்த வெங்காயம், தேன் சிரப்பில் வைட்டமின் A, B, மற்றும் J சத்துக்கள் உள்ளன. இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள் இந்த சிரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு காணலாம்.
- சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3-4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும்.
- இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்த முறையாகும்.