முடி கருகருன்னு நீளமா வளர வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அடர்த்தியான மற்றும் நீளமான முடியை பெற, இதை தவறாமல் செய்யுங்கள்.
என்ன செய்ய வேண்டும்?
உச்சந்தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து வரும் போது மயிர்க்கால்கள் தூண்டப்படுகிறது. இதனால் முடி வலிமையடைகிறது.
பிளவுபட்ட முடிகளின் நுனிகள் சரியாக வளர்ச்சி அடையாது. எனவே ஆரோக்கியமான கூந்தலை பெற பிளவுபட்ட முடிகளை தொடர்ந்து வெட்டி விடுவது முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போடாமல் கண்டிஷனரை பயன்படுத்தி வரலாம். கண்டிஷனர் தலைமுடியில் உள்ள சேதத்தை சரி செய்து நம் கூந்தலை வலிமையாக்குகிறது.
முட்டை ஹேர் மாஸ்க்கில் உள்ள ஈரப்பதம் தலைமுடியில் உள்ள வறட்சியை போக்க உதவுகிறது. புரதம் அதிகம் இருப்பதால் முடிக்கு வலிமையை தருகிறது.
இறுக்கமாக தலை பின்னுவது உங்கள் முடியிழைகளை அழுத்தி முடி உதிர்தலுக்கு வழி வகுக்கும். எனவே இறுக்கமான சிகை அலங்காரங்களை தவிர்க்கவும்.
தலைமுடியை வாரும் போது பல் அகன்ற சீப்பை பயன்படுத்தவும். ஈரமான கூந்தலாக இருக்கும் போது தலைமுடியை சீவ வேண்டாம்.
மீன், கோழி இறைச்சி, கடல் உணவுகள், முழு தானியங்கள், விதைகள் மற்றும் நட்ஸ் வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வீக்கம் மற்றும் அழற்சியை எதிர்த்து முடி உதிர்தலை தடுக்க உதவுகிறது.
இரும்புச் சத்து குறைபாடு கூட முடி உதிர்தலை அதிகரிக்கிறது. எனவே வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க முடியும்.
பயோட்டின் குறைபாடுகள் முடி உதிர்தல் மற்றும் மெலிந்து போக காரணமாகிறது. எனவே சோயா பீன்ஸ்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
புகைப்பிடிக்கும் பழக்கம் முடி உதிர்தல் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே புகைப்பிடித்தலை தவிருங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |