மழைக்காலத்தில் துணியை காயவைக்க கஷ்டமா இருக்கா? ஒரே நாளில் ஈசியாக உலர்த்த ஒரு சில டிப்ஸ் இதோ
துணி துவைப்பது என்பது அனைத்து காலகட்டத்திலும் நாம் செய்யக்கூடிய ஒரு வேலையாகும்.
துணி துவைத்தால் வெயில் காலத்தில் ஈசியாக காய்ந்துவிடும். ஆனால் மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் இருக்கும் சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது எனவே பெரிய சவாலாக இருக்கும்.
மழை காலங்களிலும் துவைத்த துணிகளை ஈசியாக உலர்த்த கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில டிப்ஸ்களை பயன்படுத்தி பாருங்கள்.
ஒரு சில டிப்ஸ்..
வாஷிங் மிஷினில் துணி துவைத்தல், துணி துவைத்த பின் மீண்டும் டிரையர் ஆப்ஷனில் போட்டு எடுத்து பிறகு ஃபேனுக்கு அடியில் காய வைத்தாலும் ஒரே நாளில் காய்ந்துவிடும்.
வீட்டில் டேபிள் ஃபேன் மற்றும் ஹீட்டர் போன்றவை இருக்கும் பட்சத்தில் துணிகளை வீட்டில் இருந்தபடியே காய வைப்பது இன்னுமே எளிது.
துணிகள் சிறிது ஈரமாக இருக்கும் போது மிதமான சூட்டில் ஈரத்துணியை அயன் செய்தால் துணி காய்வது மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கும்.
அவசரமாக ஏதேனும் ஒரு ட்ரெஸை காய வைக்க வேண்டும் என்றால் ஹேர் ட்ரையரை கூல் செட்டிங்கில் வைத்து குறைந்தது 6 இன்ச் இடைவெளியில் துணிகள் மீது காட்டி காய வைக்கலாம்.
என்னதான் ஃபேனுக்கு அடியில் காயப்போட்டாலும் மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருப்பதால் Dehumidifier பயன்படுத்தினால் ஈரப்பதத்தை சுலபமாக போக்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |