சீனியுடன் கலந்து இதை பூசினால் போதும்... உதடு எப்படி மாறுதுன்னு மட்டும் பாருங்க
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தையும் பிற உறுப்புகளையும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.
அதற்காக பல முறைகளில் பல விடயங்களை செய்து வருவார்கள். சந்தையில் விற்கப்படும் ஒரு சில பொருட்களை வாங்கி அதை பயன்படுத்தி பின் ஒவ்வாமை போன்ற சருமப்பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
அதிலும் சருமத்தை விட உதிட்டிற்கு லிப்ஸ்டிக் வாங்கி பயன்படத்தல், அது வறண்டு பின் உதட்டில் தோல் உறிப்படும். இது போன்ற உபாதையில் இருந்து விடுப்படுவதற்கு ஒரே தீர்வு வீட்டு வைத்தியம் தான்.
ஆகவே வீட்டில் அதிகமாக எப்போதும் இருக்கக்கூடிய ஒரு பொருளான சர்க்கரையை வைத்து எப்படி உதட்டை பராமரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
சீனி தேவையான அளவு
- ஒரு டீஸ்பூன் தேன்
- சிறிதளவு எலுமிச்சை சாறு
செய்முறை
-
ஒரு சிறிய பாத்திரத்தில் தேன், எலுமிச்சை மற்றும் சீனி சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- சீனி மணல் போன்று இருக்கும் போது அதை உதட்டில் பூசி, இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருந்து கீழாக மசாஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
- பின் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என்று மாற்றி மாற்றி ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மீண்டும் மசாஜ் செய்ய வேண்டும்.
- இறுதியாக இரண்டு நிமிடங்கள் முடிந்தவுடன் தண்ணீரினால் உதட்டை கழுவி விட வேண்டும்.
இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கட்டாயம் உதட்டை ஆரோக்கியமாக பராமரிக்கலாம் மற்றும் அழகானதாக மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |