ஆண்ட்ராய்டு போனில் Windowsஐ கொண்டுவர முடியுமா? இதோ எளிய டிப்ஸ்
ஆண்ட்ராய்டு (Android) ஒரு Open Source பிளாட்பார்ம் என்பதால் Software designers தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கலாம்.
ஸ்மார்ட்போனில் Windows
அந்த வகையில் தற்போது முழு வடிவிலான Windows Platformஐ நீங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தலாம்.
இதற்கு முன்பு இது சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் வின்லேட்டர் (Winlator) என்கிற தொழில்நுப்டபம் இதனை சாத்தியப்படுத்தியுள்ளது.
இந்த வின்லேட்டர் பயன்படுத்த மிகவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. APK fileகளை நிறுவுவது போல் இதை Install செய்வது மிகவும் எளிதாகும்.
ஏனெனில், Install Settingsயில் பாரிய அனுமதிகள் தேவைப்படாது என மென்பொருள் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Download
முதலில் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் இருந்து வின்லேட்டர்-ஐ Download செய்ய வேண்டும். அதன் பின் ஒரு குறிப்பிட்ட folder-க்கு download செய்த Fileஐ நகர்த்தி இயக்க வேண்டும்.
Githubயில் இருந்து Winlator APK, OBB கோப்புகளை download செய்யவும். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் APK file-ஐ Install செய்ய வேண்டும்.
அடுத்ததாக, அதை Activate செய்ய வேண்டும். சில நொடிகளுக்கு அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கும். அது நிறைவடைந்தவுடன் App-ஐ மூட வேண்டும்.
இப்போது File Managerஐ திறந்து, OBB என்ற file ஐ Copy செய்ய வேண்டும். அடுத்து Android/OBB என்ற file Locationக்கு சென்று, Copy செய்த fileஐ Paste செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, Winlator பயன்பாட்டை மீண்டும் திறந்து OBB image fileஐ நிறுவ அனுமதிக்கவும் என்று click செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் Windows games மற்றும் Applications-ஐ இயக்குவதற்கான ஒரு திரையைக் காண்பீர்கள். உங்களிடம் Qualcomm நிறுவனத்தின் Snapdragon chipset இருந்தால், எல்லாவற்றையும் நீங்கள் அப்படியே Default Setting-கிற்கே விட்டுவிடுங்கள்.
ஒருவேளை உங்களிடம் Mediatek Mali GPU இருந்தால், உங்களுக்கு ஏற்றபடி fileகளை Manage செய்ய ''Create Container'' என்ற அம்சத்தினைப் பயன்படுத்தலாம்.
தற்போது உங்கள் சிறிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் Windows OSஐ இயக்கலாம். இந்த செயலி சோதனையில் இருப்பதால், சில நேரங்களில் crash ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |