ஒரே நாளில் முகம் பளபளக்க எளிய 6 வீட்டு வைத்தியங்கள் இதோ: தினம் ஒன்று போதும்
சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க தான் அனைவரும் விரும்புவோம்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
முகத்தை பொலிவாக்க விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த எளிய 6 வீட்டு வைத்தியங்களை தினம் ஒன்றாக பயன்படுத்தி பாருங்கள்.
1. பாலாடை
தினமும் ஒரு முறை பாலாடை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலத்திலும் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கிறது.
பாலாடையை அப்படியே முகத்தில் தடவலாம் அல்லது சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
2. கடலை மாவு
கடலை மாவுடன், மஞ்சள் மற்றும் பால் அல்லது தண்ணீர் கலந்து முகத்தில் தடவ செய்ய வேண்டும்.
இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களைத் தடுக்கிறது. சருமத்தை எப்போதும் பளபளப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
3. பப்பாளி
பப்பாளியில் உள்ள பப்பேன் எனப்படும் புரோட்டியோலிக் என்சைம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. மேலும் முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
பப்பாளி பழத்தை முகத்தில் நன்றாக தடவும்பொழுது சருமம் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.
பப்பாளியுடன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்பேக் போன்றும் பயன்படுத்தலாம்.இது சருமத்தை ஹைட்ரேட் செய்து, கறைகளை மறைத்து, பளபளக்கும்.
4. தேன்
தேனில் இயற்கையாகவே மாய்ஸ்சரைசர், ஆன்டிமைக்ரோபியல், ஹைக்ரோஸ்கோபிக், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.
இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருப்பது மட்டுமில்லாமல், சருமத்திற்கு நுட்பமான பிரகாசத்தையும் வழங்குகிறது.
தக்காளி சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவலாம். தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் , வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் சருமத்தைப் பராமரிக்கிறது.
5. கற்றாழை
கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. குளிர்காலத்தில் கூட சருமத்தை வறண்டு விட செய்வதில்லை.
மேலும் இதில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் சரும எரிச்சலைத் தவிர்க்கிறது. பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கும் உதவியாக உள்ளது.
கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்தது சுத்தம் செய்யலாம்.
6. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளால் முதுமையைத் தடுக்கிறது.
குறைவான தீயில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி முகத்தில் தடவி பின் விரல்களைக் கொண்டு மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு சருமம் பிரகாசமாகவும் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |