பொடுகு தொல்லையா? இதிலிருந்து எப்படி எளியமுறையில் விடுபடலாம்?
கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும்.
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.
பொடுகுப் பிரச்னையைப் போக்க சந்தையில் ஏராளமாக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அவற்றை நம்பி, கண்ட கண்ட ஷாம்பூகளை, அதிகப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. இது சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
எவ்வித பக்கவிளைவுகளுமின்றி ஒரு சில இயற்கை வீட்டு சமையலறை பொருட்களை வைத்து கூட எளியமுறையில் விடுபட முடியும்.
அந்தவகையில் பொடுகை எப்படி எளியமுறையில் விரட்டலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
- சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளிக்கலாம்.
- பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
- வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கனும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.
- வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
- அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
- வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.
- தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
- மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.
- வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கனும்.