ஒரே வாரத்தில் கருவளையம் நிரந்தரமாக நீங்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.
முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க உதவும் சில இயற்க்கை வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாக காணலாம்.
இயற்கை வீட்டு வைத்தியங்கள்
முதலில் ஐஸ்கட்டியை எடுத்து அதனை கண்களை சுற்றி மென்மையாக கருவளையம் உள்ள பகுதியில் தேய்த்து வரலாம். இதனை தினமும் 2 முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
கிரீன் டீ பேக்கை கொஞ்ச நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்த பின் அதனை கண்களில் 10 நிமிடம் வைத்துக்கொள்ளலாம்.
புதினா இலைகளை அரைத்து அந்த சாறை கருவளையத்தின் மீது 10 நிமிடம் வைக்கலாம்.
காய்ச்சாத பால் ஒரு ஸ்பூன், பன்னீர் 2 ஸ்பூன் சேர்த்து அதில் பருத்தி பஞ்சை நனைத்து 20 நிமிடம் கண்களுக்கு மேலே வைக்க வேண்டும்.
தக்காளி சாறு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து கலந்து கருவளையத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |