அடிக்கடி தலைவலி வருதா? இந்த பாட்டி வைத்தியம் செய்தால் உடனே பறந்து போய்டுமாம்
தலைவலி ஏற்பட்டால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது.
இப்படி தலைவலி வரும் போதெல்லாம் சிலர் மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவார்கள்.
ஆனால் இப்படி அடிக்கடி சாப்பிட்டால் பின்னாளில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். மேலும் சிலர் தைலம் தேய்த்து கொண்டே இருப்பார்கள்.
தலைவலி குணமாக எளிதான பாட்டி வைத்தியங்கள் இருக்கின்றன.
கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி பறந்து போகும்.
samayam
வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும்.
கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்
தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போடலாம்.
டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.
mydr