முகத்தில் உள்ள கருமை நீக்கி, அற்புத பொலிவு தரும் தீர்வு - இதை செய்தால் போதும்..!
குளிர்காலத்தில் சருமத்தை சரியான முறையில் கவனிக்கவில்லை என்றால், முகத்தின் பொலிவு குறைந்து கருமையாக மாற ஆரம்பிக்கும்.
பெண்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க பேஸ் வாஷ் பயன்படுத்துகின்றனர். ஆனால், சில நேரங்களில் உங்கள் விருப்பப்படி முடிவு வராது.
அந்தவகையில் முகத்தை கழுவும் முன் கடைபிடித்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகத்தை பளபளக்க செய்யும் சில குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.
முகத்தை மசாஜ் செய்யவும்
முகத்தை கழுவுவதற்கு முன், முகத்தை நன்கு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகத்தில் பொலிவு ஏற்படும். முக மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்து, பிறகு பேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவவும்.
ஆவி பிடித்தல்
முகத்தை கழுவும் முன் ஆவியில் ஆவி பிடித்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கப்படுவதோடு முகத்தில் உள்ள அழுக்குகளும் நன்கு சுத்தமாகும். நீராவி எடுக்க, சூடான நீரை எடுத்து, பின்னர் ஒரு துண்டு கொண்டு மூடி, 5-10 நிமிடங்கள் ஆவி எடுக்கவும். பிறகு முகத்தை நன்கு சுத்தம் செய்து பேஸ் வாஷ் பயன்படுத்தவும்.
ஸ்க்ரப் பயன்படுத்தவும்
பேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்க்ரப் பயன்படுத்தலாம். ஸ்க்ரப் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள இறந்த சருமம் நீங்கி, முகத்தில் பொலிவு ஏற்படும். வாரத்திற்கு 1-2 முறை பேஸ் வாஷ் செய்வதற்கு முன் லேசான ஸ்க்ரப் பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |