கட்டுக்கடங்காமல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இதை மட்டும் செய்தாலே போதும்
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை குறிப்புகளை பின்தொடர்ந்தாலே போதும்.
சரிவிகித உணவு
முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கிடைக்க இரும்புச்சத்து கொண்ட கீரைகள், பருப்பு வகைகள், முட்டை மற்றும் மீன் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
மன அழுத்தம்
யோகா, தியானம் அல்லது சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும். இதனால் கார்டிசோல் அளவைக் குறைக்கலாம். இது முடி உதிர்வை தடுக்கும்.
மசாஜ்
தேங்காய் எண்ணெய் தலைக்கு வைத்து மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டலாம். இது மயிர்க்கால்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.
மூலிகை வைத்தியம்
கற்றாழை, வெங்காயத்தில் இருந்து சாறை பிழிந்து எடுத்து அதை உச்சந்தலையில் பயன்படுத்தவும். இவை முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முடி பராமரிப்பு
கடுமையான இரசாயன சிகிச்சைகள், அதிகப்படியான ஸ்டைலிங் மற்றும் மயிர்க்கால்களை சேதப்படுத்தும் இறுக்கமான சிகை அலங்காரங்களை தவிர்க்கவும். லேசான ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் தலைவாரும் போது பாதிப்பை ஏற்படுத்தாத சீப்புகளைத் தேர்வு செய்து பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |