உங்களுக்கு பண பிரச்சனையா? அப்போ கிருஷ்ண ஜெயந்திக்கு இதை செய்யுங்க.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம்
கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பெயர்களை வைத்து செல்ல கண்ணனை வழிபடுவது வழக்கம். இந்துக்களின் பண்டிகைகளுள் முக்கியமான ஒன்று கிருஷ்ண ஜெயந்தி.
இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகத்தில் நிறைந்திருக்கும் பாவங்கள், தீமைகள் போன்றவற்றை அழிக்க விஷ்ணு பகவான் சாதாரண மானிடராக அருள்பாதித்தார்.
நாம் சரியான முறையில் அவரை நினைத்து வழிபட்டால் நமக்கு ஏற்படும் கஷ்டமான காலத்தில் கண்ணன் துணையாக இருப்பார். வாழ்க்கையில் பண கஷ்டம் வந்தால் இதனை செய்யுங்கள்.. உங்கள் துன்பமெல்லாம் பறந்து விடும்.
நீங்கள் வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் என்றால் கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்கள் வீட்டிற்கு ஏழு பெண் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு பாயாசத்தைக் கொடுங்கள். இதனை நான்கு நாள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
வருமானத்தை அதிகரிக்க நினைப்பவர்களும் கண்டிப்பாக இதை செய்யலாம். கிருஷ்ண ஜெயந்தி நாளில் துளசியை மாலையை கிருஷ்ணனுக்கு கட்டி வழிபட்டால் கடன் பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்க பெரும் உதவியாக இருக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று நள்ளிரவு 12 மணிக்கு பாலில் குங்குமம் சேர்த்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்தால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும் என்று முன்னோர்கள் கூறுவது உண்டு.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் மாடு அல்லது கன்றுக்குட்டியின் சிலையை வீட்டில் உள்ள பூஜை அறையில் வாங்கி வைத்தால் வீட்டின் நிதி நிலைமை படிப்படியாக அதிகரிக்கும்.