Ceiling Fan வேகமாக சுழலவில்லையா? வெறும் 70 ரூபாய் செலவில் அதிகரிக்கலாம்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் நம் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் (Ceiling Fan) வேகமாக சுழல்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.
இந்நிலையில், பல வீடுகளில் AC இல்லாமல் இருக்க முடிவதில்லை. இருந்தாலும் நாம் அனைத்து அறைகளிலும் AC பயன்படுத்த முடியாது. இதனால் சீலிங் ஃபேன் (Ceiling Fan) தான் பயன்படுத்துகிறோம்.
ஆனால், குளிர்காலத்தில் மின்விசிறி சுற்றும் வேகத்தை விட, கோடையில் இயங்கும் போது வேகம் குறைவதை நீங்கள் கவனிக்கலாம்.
வேகத்தை அதிகரிப்பது எப்படி?
அப்போது நாம் மின்விசிறியின் வேகத்தை நாம் 5 -ல் வைத்தாலும் 1-ல் இருப்பது போலவே நமக்கு காற்று கிடைக்கும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் விசிறி கத்திகள் தூசியால் அழுக்காக இருப்பது முக்கியமாக காரணமாகும். இதனால் நாம் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.
முதலில் நாம் அழுக்குகளை சுத்தப்படுத்துவதற்கு முன்பு மின்விசிறியின் ஸ்விட்சை ஆஃப் செய்ய வேண்டும். பின்பு, ஃபேன் பிளேடுகளை முதலில் உலர்ந்த துணியால் சுத்தம் செய்து, அடுத்து ஈர துணியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அப்படியும் உங்களுக்கு வேகமாக காற்று வரவில்லை என்றால் கண்டென்ஸர் (condenser) மூலம் வேகத்தை அதிகரிக்கலாம். இந்த பொருள் ரூ.70 முதல் 80 வரையில் இருக்கும். இதனை ஓன்லைன் தளங்களிலோ அல்லது எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்கும் கடைகளிலோ கிடைக்கும்.
இந்த condenser -யை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். பழைய condenser Wire எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனித்து அதே வழியில் மாற்றுங்கள். பின்பு, நீங்கள் மின்விசிறியை ஆன் செய்து பார்த்தால் வேகமாகா சுழலும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |