பெண்களே..! மழைக்காலத்தில் குளிப்பதற்கு முன் இதை தடவி குளித்து பாருங்கள்
பொதுவாகவே குளியல் என்பது தவறாமல் செய்ய வேண்டிய ஒரு செயலாகும். இதுவே குளிர் காலத்தில் குளிப்பது என்றால் பலரும் அஞ்சுவார்கள்.
உடல் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், காலையில் எழுந்திருத்தவுடன் குளிப்பது நல்லது.
ஆனால் தினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். குளிர்காலத்தில் சருமம் தொடர்பான பல பிரச்னைகள் ஏற்படும்.
ஆகவே சருமம் மீது அதீத கவனத்துடன் செயற்பட வேண்டும். எனவே என்ன மாதிரியான விடயங்களை பின்பற்றலாம் என பார்க்கலாம்.
- குளிர் காலத்தில் குளிப்பதற்கு முன் உடலிற்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால், சரும வறட்சி பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
- குளிப்பதற்கு முன் உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, இரத்த ஓட்டமானது சீராக இருக்கும்.
- குளிப்பதற்கு முதல் முகத்தில் எண்ணெய் தேய்த்தால் முகச் சுருக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
-
உடலில் எண்ணெய் தடவினால் தசைகள் தளர்ந்து சோர்வு நீங்கி, மூட்டு வலி மற்றும் வீக்கம் பிரச்சனைகள் நீங்கும்.
- அதிக நேரம் தண்ணீரில் இருக்காமல் விரைவாக குளித்து தண்ணீரில் இருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும்.
- ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை குளித்தால் போதும்.
சருமத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க சற்று குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
- சர்க்கரை மற்றும் தேனுடன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயைக் கலந்து ஸ்கரப் செய்து குளிக்கலாம்.
-
உங்கள் தலை மற்றும் முடியைக் கழுவுவது என்றால் தண்ணீரை சற்று சூடாக வைத்துக்கொள்ளவும்.
- குளிர்காலத்தில் ஷாம்பு போடுவதற்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது.
வானிலை மாறத் தொடங்கும் போது, உங்கள் சருமம் சிறிது வறண்டு அல்லது அரிப்பது போன்ற உணர்வை எதிர்க்கொள்வீர்கள்.
மேலும், இதைச் செய்வதன் மூலம், சருமத்தில் ஏற்படும் தொற்று நோய்களைத் தவிர்க்கலாம். ஆகவே குளிப்பதற்கு முன் இந்த விடயங்களை முயற்சித்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |