காரணம் இல்லாமல் அதிக சோர்வு, எரிச்சல் ஏற்படுகின்றதா? மருத்துவர் கொடுக்கும் எச்சரிக்கை
Anemia Symptoms: பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ரத்த சோகை பிரச்சனைக்கு என்னென்ன காரணம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரத்த சோகை
இன்றைய காலத்தில் ரத்த சோகையினால் பெரும்பாலான பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் படி, இந்தியாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 57 சதவீனருக்கும், 15 - 19 வயதுக்குட்ட இளம்பிள்ளைகளுக்கு 59.1 சதவீதத்தினரும் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.
அதாவது ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு இயல்பைவிட குறைவாக செல்லும் போது, உடலில் மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறன் குறைவதால் ரத்த சோகை ஏற்படுகின்றது.

அறிகுறிகள் என்ன?
ரத்த சோகைக்கான முக்கிய அறிகுறிகளாக அதிகப்படியான சோர்வு, எரிச்சல் மற்றும் கவனச்சிதறல் ஏற்படுகின்றது. ஆனால் இதனை நமது பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள விளைவு என்று சாதாரணமாக கடந்து செல்லும் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர்.
உடல் பலவீனம், தலைசுற்றல், மூச்சு திணறல், தலைவலி, வெளிறிய சருமம், குளிர்ச்சியான கை, கால்கள், வேகமான மற்றும் சீரற்ற இதய துடிப்பு இவைகள் முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றது.

எவ்வாறு கண்டுபிடிப்பது?
அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கு, அல்சர், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 அல்லது ஃபோலேட் குறைபாடு, சிறுநீரக நோய், கொக்கிப்பழு, தலசீமியா போன்ற கோளாறுகளால் ரத்தசோகை ஏற்படலாம்.
ஆதலால் CBC என்று கூறப்படும் கம்ப்ளீட் பிளட் கவுண்ட் மற்றும் பிற ரத்த பரிசோதனைகள் மூலமாக இதன் காரணத்தை கண்டறிய முடியும்.

எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், பீன்ஸ், கீரைகள், நட்ஸ் மற்றும் இறைச்சி இவைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் பி12 மற்றும் போலேட் சத்துக்கள் நிறைந்த இலை காய்கறிகள் மற்றும் பயறு வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளவும்.
உடம்பில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை அதிகரிப்பதற்கு வைட்டமின் சி சத்து மிகவும் முக்கியம் ஆகும். ஆகவே வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய், கொய்யா, எலுமிச்சை இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
இரும்புச்சத்தை உறிஞ்சப்படுவதை தடுக்கும் பானமாக இருக்கும் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |