திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதில் சாதனை படைத்த பக்தர்: எப்படி தெரியுமா?
ஸ்ரீகாகுளம் நகரைச் சேர்ந்த மஹந்தி ஸ்ரீனிவாச ராவ் என்பவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவார்.
இதுவரை 449 முறை ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் நடந்தே சென்று படிகளில் ஏறி சாமி தரிசனம் செய்ததால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாதயாத்திரையாக சென்று ஏழுமலையானை தரிசித்து வரும் ஸ்ரீனிவாச ராவ் 1997 ஆம் ஆண்டு தனது முதல் பாத யாத்திரையை தொடங்கினார்.
அதன்பிறகு 26 ஜூலை 2018 வரை மட்டுமே 175 முறை தரிசித்து முடித்துள்ளார்.
1997 முதல் 2004 வரை ஆண்டுக்கு ஒருமுறை சென்று கொண்டிருந்த அவர், 2004க்கு பிறகில் இருந்து 2009 வரை 28 முறை தரிசித்துவிட்டாராம்.
மேலும், 2010 - 2014-ல் 21 முறையும், 2015-இல் 20 முறையும், 2016-இல் 15 முறையும் தரிசித்துள்ளார்.
இதேபோன்று 2017ஆம் ஆண்டு, சீனிவாச ராவ் 50 முறையும், அதன் பிறகில் இருந்து இந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வரை 40 முறை என மொத்தம் 449 முறை சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதுவரை ஸ்ரீனிவாச ராவ் வாழ்க்கையில் ஒரு நாளைக்கு ஒரு முறையில் இருந்து 3 முறை கூட மலை ஏறியுள்ளாராம்.
இவரின் இந்த தீவிர பக்தியையும், இவரின் சாதனைகளையும் பாராட்டி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கொடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |