அசர வைக்கும் திருப்பதி கோயிலின் முழு சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா?
திருமலை திருப்பதி கோவிலில் தினமும் சுமார் 3 கோடி முதல் 4 கோடி வரை வசூல் செய்கிறது. ஒரு நாளைக்கு மாத்திரமே இத்தனை கோடி என்றால், கோயிலின் முழு சொத்து மதிப்பை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்.
திருப்பதி கோயிலின் சொத்து மதிப்பு
இந்தியாவின் மிகப் பெரிய கோயிலின் ஒன்றாகக் கருதப்படும் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் மாதம் வருமானம் மாத்திரம் சுமார் 100 கோடியைத் தாண்டும்.
2023 ஆம் ஆண்டில் திருமலை கோவிலின் உண்டியல் வருமானம் ரூ.1398 கோடியை எட்டியுள்ளது. இந்த வருமானமானது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை இடுவதாகும்.
இதை தவிர கோயிலுக்கு பல வகையான வருமானம் மற்றும் சொத்துக்கள் உள்ளன. அனைத்தையும் சேர்த்தால் கடந்து ஆண்டு வருமானமானது சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருக்கும்.
2022ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையின்படி, சொத்துக்களின் முழு மதிப்பானது ரூ. 2.5 லட்சம் கோடியாகும்.
இந்த அறிக்கை வெளியாகி 1 வருடமும் 2 மாதங்களும் ஆகிறது, இந்நிலையில் தற்போது சொத்து மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் கோடியை எட்டியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் கோலியின் மொத்த சொத்துக்களை விட திருப்பதி கோயில் உண்டியலின் ஒரு ஆண்டு வருமானம் அதிகமாகும்.
அதாவது சச்சினின் சொத்து மதிப்பு ரூ.1300 கோடி ஆகும். கோலியின் சொத்து மதிப்பு ரூ.1000-1100 கோடி ஆகும். ஆனால் திருப்பதி உண்டியலின் ஒரு வருடத்திற்கான வருமானம் மாத்திரம் சுமார் ரூ. 1400 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |