திருப்பதி - அப்பலாயகுண்டா ஆலய புஷ்ப யாகம்
திருப்பதி - மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் ஆலய வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மே மாதம் 31ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 8ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது.
ஆலய வழப்பாட்டின் போது நித்ய கைங்கர்யங்கள், பிரம்மோற்சவ விழாவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்றையதினம் (06.07.2023) ஆலயத்தில் புஷ்ப யாகம் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு அபிஷேகம்
இதன்போது உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் போன்றவற்றினால் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புஷ்ப யாகத்துக்கு பயன்படுத்தப்பட்ட மலர்களை ஆலயத்திலுள்ள மூலமூர்த்தியிடம் வைத்து சிறப்பாக பூஜைகள் வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
உற்சவ மூர்த்தி உலா
அதன் பின்னர் மலர் கூடைகளை ஆலயத்தின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக பிரத்யேக மேடைக்கு எடுத்து வந்துள்ளனர்.
உற்சவ மூர்த்திகளும் வீதி உலா வந்துள்ளனர்.
இதனையடுத்து மதிய வேளைகளில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதி மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க புஷ்ப யாகம் நடைப்பெற்றிருந்தது.
இதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா என 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
அதன்பிறகு ஆலயத்தின் நான்கு மாட வீதிகளில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் வீதி உலா வந்ததுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |